சுரைக்காய் உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள் . முடிந்தால் இரண்டு வேளையும் சாப்பிடுங்கள். 2 வாரம் கழித்து எப்படி இருக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். அத்துடன் மூக்கிரட்டை மற்றும் சி றுபீளை என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை 1 ஸ்பூன் மூக்கிரட்டை பொடி மற்றும் சிறுபீளை பொடி சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து 1 டம்ளர் நீராகக் காய்ச்சி வடிகட்டி குடியுங்கள். இரவு சாப்பாடு முடித்த பின் 1 மணி நேரம் கழித்து காலையில் கொடுத்தது போலவே கசாயம் வைத்துக்கொடுங்கள். 10 நாட்கள் கழித்து எப்படி இருக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். தினமும் எப்படி இருக்கிறது என்று இமெயில் மூலம் தெரியப்படுத்துங்கள்.