அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் அனுமதி சான்றிதழ் வழங்கினார். கண்ணமங்கலம், மே. 25 திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (2015 -16 ) தேர்வான பயனாளிகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் முன்னாள் வார்டு கவுன்சிலர் சரவணன் தலைமை வகித்தார்,முன்னாள் யூனியன் சேர்மன் வழக்கறிஞர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் திருமால், பால் கூட்டுறவு சங்க தலைவர் கே டி குமார், பேரவை பாரி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த 2015 -16 ஆண்டிற்கான அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட 21 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 8 பேர் மனை இல்லை, செலவு செய்ய இயலாது என இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து கடிதம் கொடுத்தனர். எனவே புதிதாக 8 பயனாளிகள் தேர்வு செய்யபட்டனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ,அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வான பயனாளிகள் 8 பேருக்கு அனுமதி சான்றிதழை வழங்கினார். அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன் , கோவிந்தராஜன், கஜேந்திரன், கருணாகரன் , புங்கன்பாடி சுரேஷ், மேல்நகர் ரவி, மாவட்ட நுகர்வோர் சங்க தலைவர் சாமிநாதன், ருக்மணி, சதீஷ், குமரன்,புலவன் பாடி சுரேஷ் ராஜா, பாண்டியன், வடிவேல், தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.