புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை வழியாகவும் செல்லலாம் மனிப்பள்ள வழியாகவும் செல்லலாம் இந்த கோவிலுக்கு மன்னர் காலத்தில் பெயர் புகழ்பெற்ற இந்த தளம் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது மிக மிக சக்தி வாய்ந்த முனிஸ்வரர் கோவில் அதன் அருகில் அறை இன்று தடுக்கப்பட்டுபெண் தெய்வமும் உள்ளது எதிர்புறம் தலை குனிந்த நிலையில் கருப்பர்சாமி உள்ளது கருவரைக்குள் உள்ள இரண்டு சாமிகளுக்கும் தலை ஏதும் கிடையாது தலை இருக்க வேண்டிய இடத்தில் அரிவாள் உள்ளது அது அசல் தலையைப் போல் உள்ளது மிகவும் பழைமை வாய்ந்த கோவில் என்பதால் சுற்று சுவர் அனைத்தும் சேதம் அடைத்து உள்ள நிலையில் கோவிலின் எதிர்புறம் மிகப் பெரிய ஆழமரம் அழகாக அமைந்துள்ளது கோவிலின் பின்புறம் மிக அழகான குளமும் ஒன்று உள்ளது அதில் எப்போதுமே தண்ணீர் உள்ளது இக்கோவிலின் விசேசம் என்னவென்றால் வெள்ளையர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை புதுக்கோட்டையில் இருந்து பிடித்து செல்கையில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை குதிரையில் இக்கோவிலுக்கு சென்று மறைந்து இருந்ததாக பெரியோர்கள் கூறுகின்றனர் வெள்ளையர்கள் ஊமைத்துரையை தேடி வருகையில் கோவிலின் சுற்று சுவரை சேதபடுத்தியதும் அவர்களாகத்தான் இருந்திருக்கும் மிக அருமையான இயற்கையான சோலையில் அமைந்திருக்கும் இக்கோவில் மிக பிரசித்தி பெற்றது புதுக்கோட்டை அருகில் சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இக்கோவிலை பற்றி அறியாதோர் நிறைய பேயர் உள்ளனர் ஏன் என்றால் சுற்றி வரை பாதை இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பே வனத்துறை மறைத்து விட்டது இக்கோவிலுக்கு சொந்தமான நிலம் பல ஏக்கரில் உள்ளதாம் இக்கோவிலுக்கு மக்கள் அதிகம் செல்லாததால் அந்த இடத்தை எல்லாம் வனத்துறை சூறையாடி தைலமர காடாக மாற்றி விட்டனராம் அதனால் இக்கோவில் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு மாற்றி விட்டனர் கண்டிப்பாக இக்கோவில் அறநிலையத் துறைக்கு சொந்தமானதாகத்தன் இருக்க முடியும் இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இக்கோவிலை மறுசீராய்வு செய்து மன்னர் புகழை காக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கைஇக்கோவிலை சீராய்வு செய்தால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் தைல மரக்காட்டிற்குள் நடக்கும் அலங்களும் குறையும் ஆகவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்