புதுக்கோட்டை மாவட்டத்தில் Districst Education office மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் 140 ஆண்டுகளாக வடக்கு ராஜா வீதியில் நகர் மன்றம் அருகில் உள்ளது இக்கட்டிடம் மன்னர்காலத்தில் கட்டப்பட்ட கட்டிம் ஆகும் ஓடுமேயப்பட்ட அலுவலகம் மாவட்ட முழுவதும்முள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவேடு முதல் அனைத்து ரெக்கார்டுகளும் இருக்கும் இடமாக உள்ளது அந்த அலுவலகத்தை ஒரு வங்கியைப் போல் பாதுகாக்க வேண்டும் ஏன் என்றால் சில கயவர் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அலுவலக அதிகாரிகள் இல்லாமல்லே அலுவலகத்தில் திருட்டுதனமாக தனக்கு தேவையான அனைத்து சான்றுகளையும் தனக்கு தகுந்தவாறு எடுத்தும் செல்லும் அளவிற்கு மாவட்ட தொடக்க கல்வி கட்டிடம் பாலடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது குறைந்த பட்சம் 10 முதல் 15 வரை அரசு அலுவலக ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர் கட்டிடத்திற்குள் நுளைந்த உடனே உயிரை பற்றித்தான் யாபகம் வருமாம் கட்டிடத்தின் அனைத்து இடங்களும் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டதுதொடக்க கல்வி அலுவலர் அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அலுவலர்களை அளைத்து கலந்தாய்வு கூட்டம் மற்றும் அலுவலக கூட்டங்கள் நடத்துவதற்கு கூட முடியாதாம் சுமார் 100 பரப்பளவு சதுரத்தில் இருந்த கட்டிடம் இடிந்து இடிந்து தற்போது 5 சதுரம் பரப்பளவில் ஒடுங்கி விட்டது வருப்போகும் மழை காலத்தில் இன்னும் இடியும் நிலை உள்ளது பெண் ஊழியர்கள் மிகவும் கஷ்டப்படுவது கழிப்பறை வசதி இல்லாமல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் ஒரு பெறும் புதரைப் போலவும் பாலடைந்த பேய்மண்டபத்தையும் போலவும் காட்சி அளிப்பதால் மது போதகர்களுக்கும் வேறு ஒரு தொழிலில் ஈடுபடும் கயவர்களுக்கும் இரவு நேரங்களில் பயன்படுகிறதாம் இப்படி பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுவதால் அலுவலக அலுவலர்கள் மன கஷ்டத்திற்கு ஆளாகின்றனர் தமிழகம் முழுவதும், புதுக்கோட்டை முழுவதும், ஒரு பஞ்சாயத்தில் ஏதேதுக்கோ நிதி ஓதுக்கி பலப்பல கட்டிடங்கள் கட்டி வரும் தமிழக அரசு ஒரு மாவட்டத்திற்கே தொடக்க கல்வி அலுவலகம் அதுவும் விவசாயிகளின், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை கவனிக்கும் அதிகாரிகள் இருக்கும் அலுவலகம் கண்டிப்பாக அனைத்து வசதிகளுடன் அமைத்து கொடுப்பது தமிழக அரசின் கடமை இதை கண்டிப்பாக கல்வி துறை அமைச்சர் அவர்களின் செவிகளுக்கு கேட்க வேண்டும் இதை புதுகை மன்னின் மைந்தன் சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்துரைத்து DEO தொடக்க கல்வி அலுவலகம் விரைவில் அமைத்து தர வேண்டும் வரும் மழை காலங்களில் உயிரை பாதுகாக்க ஆவணங்களை பாதுகாக்க உடனே மாற்று இடமும் செய்து தர வேண்டும் என்று அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்